புவியினைப் போல ஒரு கிரகம்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

27 April 2020 தொழில்நுட்பம்
2ndearth.jpg

தற்பொழுது புவியினை போல இருக்கும் கிரகம் ஒன்றினை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

பிராக்சிமா சென்டாரி என்ற பால்வெளியில், நாம் வாழ்கின்ற புவியினைப் போல ஒரு கிரகத்தினைக் கண்டுபிடித்து உள்ளனர். இதில், ஏலியன்கள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கு பிராக்சிமா பி என்றுப் பெயரிட்டுள்ளனர். இந்தக் கிரகமானது, இன்னும் அழியாமல் உள்ளது எனவும் நம்புகின்றனர்.

இந்தக் கிரகமானது, பாறைகள், மலைகள், நீர் உள்ளிட்டவைகளைக் கொண்டு இருக்கலாம் எனவும், புவியினை விட சற்றுப் பெரியதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதுகின்றனர். இந்தக் கிரகமானது, புவியில் இருந்து சுமார் 4 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதாவது 25 மில்லியன் மைல்களுக்கும் அப்பால் இந்தக் கிரகம் அமைந்துள்ளது.

இந்தக் கிரகத்தின் வெப்ப நிலையானது, -90 டிகிரி செல்சியஸில் இருந்து, 30 டிகிரி செல்சியஸ் இடையில் இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், இந்தக் கிரகத்தில் இருந்து நம்முடையப் புவிக்கு, ஏலியன்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எதிர்காலத்தில், அதிவேக விண்கலங்கள் உருவாக்கப்பட்ட பின், மனிதர்கள் இந்தக் கிரகத்திற்குச் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ள, ஹார்ப்ஸ் ஸ்பெக்டோகிராப் என்ற கருவியின் மூலம், இந்த கிரகமானது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

HOT NEWS