pic credit: ESA/Hubble, M. Kornmesser(nasa.org)
புவியை விட பெரிய அளவிலான, எக்ஸோ பிளானட் என அழைக்கப்படும் கிரகத்தினை, நாசாவின் ஹப்பில் தொலைநோக்கி மூலம், கண்டுபிடித்துள்ளனர்.
கே2-18பி(K2-18b) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கிரகத்தினைப் பற்றித் தான் தற்பொழுது, உலகமே பேசி வருகின்றது. உலகில் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் அனைவருமே, இதனைப் பற்றி உரையாடி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த கிரகம் தற்பொழுது, புகழ் பெற்றுவிட்டது.
இந்த கிரகம், சிம்ம ராசி நட்சத்திர மண்டலத்திற்கு நேராக, புவியில் இருந்து இருந்து, சுமார் 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் பார்ப்பதற்கு நம்முடைய புவியைப் போல இருப்பதாகவும், இந்த கிரகத்தில், நீரோடைகள், மலைகள் இருப்பதையும் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளனர்.
சிவப்பு நிற சிறிய நட்சத்திரத்தைப் போல இருக்கும் இந்த கிரகத்தில், நீர் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக, நாசா விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மேலும், இந்தக் கிரகத்தில் நைட்ரஜன் மற்றும் மீத்தேன் போன்றவை இருப்பதற்கான, சாத்தியக் கூறுகளும் இருக்கலாம் என நம்புகின்றனர்.
இந்த கே2-18பி(K2-18b) கிரகத்தின் தட்ப வெப்பநிலையிலும், அதன் சுற்றுச் சூழலிலும் நீர் திவளகைள் இருப்பதாக கருதுகின்றனர். கே2-18பி(K2-18b) என்ற இந்த எக்ஸோ பிளானட், நம் மனித விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட 100க் கணக்கான சூப்பர் எர்த்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதனைப் பற்றி தெளிவாகத் தெரியாததால், விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இங்கு மனிதர்களால் செல்ல முடியுமா? ஒரு வேளை செல்ல முடிந்தால் அங்கு வாழ முடியுமா? எனவும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
நம்முடைய சூரியக் குடும்பத்திற்கு வெளியே பல சூப்பர் எர்த்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த கிரகத்தில் மட்டுமே, மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக நாசா கூறியுள்ளது. புவியை விட 8 மடங்கு பெரியதாக உள்ள இந்தக் கிரகம், சிறிய அளவிலான, சூரியனை இந்தக் கிரகம் சுற்றி வருகிறது. இந்த சூரியன் நம்முடைய சூரியனை விட சிறியதாகவும், மிக சக்தி வாய்ந்ததாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
source:www.nasa.gov/feature/goddard/2019/nasa-s-hubble-finds-water-vapor-on-habitable-zone-exoplanet-for-1st-time