உலகம் அழியப் போகின்றதா? மாயன் காலண்டரால் புதிய பீதி!

17 June 2020 அரசியல்
mayancalendar.jpg

வருகின்ற ஜூன் 21ம் தேதியுடன் உலகம் அழிய உள்ளது என, புதிய பீதியானது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

உலகம் முழுவதும் தற்பொழுது கொரோனா வைரஸ் பரவி வருகின்ற சமயத்தில், முழு சூரிய கிரகணமும் வருகின்றது. இதனால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், மாயன் காலண்டர் கணித்த 2012ம் தேதி அழிவானது, வருகின்ற ஜூன் 21ம் தேதி நிகழும் எனக் கூறப்பட்டு உள்ளது.

தற்பொழுது நாம் கிரிகோரியன் காலண்டரைப் பயன்படுத்தி வருகின்றோம். இதற்கு முன்னர் ஜூலியன் காலண்டர்களும், மாயன் காலண்டர்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளதை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டு உள்ளனர். இந்த கிரிகோரியன் காலண்டரானது 1582ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இது சூரியனை, புவியானது சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கால அளவைப் பொறுத்துக் கணிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், அதற்கு முன்பிருந்த மாயன் காலண்டரோ அல்லது ஜூலியன் காலண்டரோ அப்படியல்ல. அவைகள் தற்பொழுது உள்ள காலண்டரை விட, ஆண்டுக்கு 11 நாட்கள் குறைவாகக் கொண்டவை. அப்படி வைத்துப் பார்க்கும் பொழுது, மாயன் காலண்டரில் குறிப்பிடப்பட்ட அந்த 2012ம் ஆண்டு அழிவு நாளானது, வருகின்ற ஜூன் 21ம் தேதி சூரியக் கிரகணத்தின் பொழுது தான் வருகின்றது.

இதனை சமூக வலைதளங்கள், வாட்ஸ் ஆப் உள்ளிட்டவைகளில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதனைப் பற்றி விளக்கமளித்துள்ள நாசா விஞ்ஞானி, இப்படித் தான் 2003ம் ஆண்டு பின்னர் 2012ம் ஆண்டு கூறினர். அவ்வாறு எவ்வித அழிவும் ஏற்படவில்லை. தற்பொழுது 2020ம் ஆண்டு கூறுகின்றனர். இப்பொழுதும் எவ்வித அழிவும் ஏற்படப் போவதில்லை என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS