புதிதாக ஐந்து மாவட்டங்கள்! தமிழக அரசு அறிவிப்பு!

13 November 2019 அரசியல்
tngovernment.jpg

தமிழ்நாட்டில், வேலைவாய்ப்பு அதிகரிக்கின்றதோ இல்லையோ, மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தற்பொழுது புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. இது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பினை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தினைப் பிரித்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று மூன்று புதிய மாவட்டங்களை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. நெல்லை மாவட்டத்தினைப் பிரித்து, நெல்லை மற்றும் தென்காசி என்ற மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதே போல், காஞ்சிபுரம் மாவட்டமானது பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் அரசாணையானது, தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில், இந்த மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உருவாக்கப்படுவதற்கான, அறிவிப்பு உள்ளது.

HOT NEWS