கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இருந்து பன்றி காய்ச்சல் பரவ ஆரம்பித்தது!

30 June 2020 அரசியல்
pig.jpg

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவில் இருந்து உலகம் முழுக்கப் பரவியுள்ள கொரோனா வைரஸே இன்னும் முடிவிற்கு வரவில்லை. அதற்குள் அடுத்த பாதிப்பினை சீனா சந்தித்துள்ளது.

சீனாவில் தற்பொழுது புதிய பன்றிக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, அமெரிக்காவின் அறிவியல் இதழான பினாஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஹெச்ஒன்என்ஒன் என்ற பன்றிக் காய்ச்சல் வைரஸானது, உலகம் முழுக்க அபாயமானதாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது.

பின்னர், பல்வேறுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியதன் விளைவாக, இந்த வைரஸானது எளிதாக கட்டுப்படுத்த முடிந்தது. இருப்பினும், தற்பொழுது சீனாவில் புதிதாக உருவாகியுள்ள இந்த வைரஸானது ஜி4 என்றுக் கூறப்பட்டு உள்ளது. இது, முற்றிலும் மாறுபட்ட வைரஸ் தன்மையினைக் கொண்டுள்ளதாக, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த வைரஸானது, ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதரிடம் பரவும் தன்மைக் கொண்டதாகக் கருதப்படுகின்றது.

இந்த வைரஸும், கொரோனா வைரஸிற்கு நிகரான வைரஸாகவே விஞ்ஞானிகளால் பார்க்கப்படுகின்றது. தற்பொழுது புதியதாக உருவாகி உள்ள இந்த வைரஸால், சீன மட்டுமின்றி உலகமே பீதியில் ஆழ்ந்துள்ளது.

HOT NEWS