நீட் ஜேஇஇ தேர்விற்கான பாதுகாப்பு நடைமுறைகள் வெளியானது!

08 July 2020 அரசியல்
neet.jpg

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வானது விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாதுகாப்பாகத் தேர்வு நடத்துவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக நடத்தப்படும் நீட் தேர்வும், பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வாகக் கருத்தப்படும் ஜேஇஇ தேர்வும் இந்த ஆண்டும் நடைபெற உள்ளன. இதில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு, தேர்வு எழுத உள்ளனர். தற்பொழுது கொரோனா வைரஸ் பரவி வருவதால், மாணவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட்டு விடாமல் இருக்க வேண்டும் எனப் புதிய வழிமுறைகள் வெளியாகி உள்ளது.

அதன்படி, தேர்வு மையமானது, முழுமையாக கிருமி நாசினித் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். தேர்வுக் கண்காணிப்பாளர் மருத்துவச் சான்றிதழ் அவசியம் வாங்கயிருக்க வேண்டும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, புதிய கையுறைகள் மற்றும் முகக்கவசங்களை வழங்க வேண்டும். தேர்விற்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனையினை செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பயன்படுத்தப்படும் சிறப்பு நாற்காலிகளிலும், கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மாணவர்கள் அமர வேண்டிய இடங்களுக்கு ஸ்டிக்கர் அல்லது பெயிண்ட் மூலம் குறிப்பிட வேண்டும்.

தேர்வறைக்கு அருகில் உள்ளக் குப்பைத் தொட்டிகளை, அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பெற்றோர்களுடன் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருவார்கள் என்பதால், அங்கு கூட்டம் கூடாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேர்வு முடிந்த உடன், மாணவர்களின் இருக்கைகளை கிருமி நாசினிக் கொண்டு, சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS