ஜப்பானில் புதிய ஹைசென் புயல்! பொதுமக்கள் அச்சம்! 2 லட்சம் பேருக்கு ஆபத்து!

07 September 2020 அரசியல்
stormtyphoon.jpg

ஜப்பான் நாட்டில் அடுத்த புயல் அச்சுறுத்தல் காரணமாக, 2 லட்சம் பேர் ஆபத்தில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஜப்பான் நாட்டில் அடிக்கடி சுனாமி, புயல், சூறாவளி, நிலநடுக்கம் ஆகியவை சாதாரணமாக வரக் கூடியவை. சென்ற ஆண்டுப் பல முறை புயல் வீசியதால், ஜப்பான் நாடு திண்டாடியது. அதே போல், இந்த ஆண்டு கடந்த வாரம் மேசக் என்ற புயலானது, ஜப்பானை மிக மோசமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில், ஜப்பான் நாட்டுக் கடலில் நின்று கொண்டிருந்த சரக்குக் கப்பலானது, கடலில் மூழ்கியது. இந்தக் கப்பலில், ஆறாயிரம் பசு மாடுகள் இருந்தன. அத்துடன் 43 ஊழியர்கள் இருந்தனர்.

இவர்களில் 3 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களின் நிலைக் கேள்விக் குறியானது. இந்நிலையில், தற்பொழுது ஹைசென் புயலானது தற்பொழுது தாக்க உள்ளதாக, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்தப் புயல் காரணமாக, ஓகினாவா, நாகசாகி, ககோஷிமா உள்ளிட்டப் பலப் பகுதிகளில், 160 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசும் எனக் கூறப்படுகின்றது.

அங்கு வசிக்கின்ற 2 லட்சத்திற்கும் அதிகமானப் பொதுமக்களை, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியானது தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்தப் புயல் காரணமாக, பாதிப்புகள் அதிகமாகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகின்றது. இந்தப் புயல் காரணமாக, அந்நாட்டு மக்கள் கடும் அச்சமடைந்து உள்ளனர்.

HOT NEWS