ஜூம் செயலியா? ஜியோ மீட் செயலியா? காப்பியடித்த ஜியோ! கலாய்க்கும் நெட்டிசன்கள்!

06 July 2020 அரசியல்
jiomeet.jpg

தற்பொழுது ஜூம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக ஜியோ மீட் என்றப் புதிய செயலியினை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் தற்பொழுது பொது மக்கள் மற்றம் பயனர்களின் பாதுகாப்புக் கருதி, சீனாவின் 59 செயலிகளை இந்திய அரசாங்கம் தடை செய்தது. இதனால், இது பொதுமக்களுக்கு ஒரு சில அசௌகர்யங்களைத் தந்தது. குறிப்பாக, டிக்டாக் மற்றும் ஜூம் செயலிகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.

பொதுவாக அனைத்து ஸ்மார்ட்போன் பயனர்களும், ஊரடங்கின் காரணமாக தற்பொழுது வீட்டில் இருப்பதால், தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அலுவலகக் கூட்டங்களுக்கு ஜூம் ஆப்பினைப் பயன்படுத்தி வந்தனர். மேலும், கூகுகள் மீட் மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் உள்ளிட்ட ஆப்களைப் பயன்படுத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில், இவைகளுக்குப் போட்டியாக, இந்தியாவின் சார்பில் முதன்முறையாக ஜியோ மீட் என்ற புதிய ஆப் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆப்பில் எவ்வித நேரக் கட்டுப்பாடும் கிடையாது. ஒரு நாளைக்கு தொடர்ந்து 24 மணி நேரம் கூட, ஆன்லைனில் மீட் செய்ய இயலும். தொடர்ந்து 100 நபர்களுடன் ஒரே நேரத்தில், வீடியோ மீட்டிங் செய்ய இயலும். இவ்வளவு பெரிய வசதியானது, இதுவரை எந்த ஒரு ஆப்பிலும் வெளியாகிவில்லை. இந்த சூழ்நிலையில், ஜூம் செயலில் உள்ள வசதிகளை அப்படியேக் காப்பியடித்து, ஜியோ மீட் உருவாக்கப்பட்டு உள்ளதாக, புதிய புகார் எழுந்துள்ளது. அதில், பயனர்கள் பயன்படுத்தும் வசதிகள் இதில் சற்றுப் பெரிதாக்கப்பட்டு உள்ளதாகவும் பயனர்கள் கிண்டலடிக்கின்றனர்.

HOT NEWS