புதுச்சேரியில் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

14 February 2020 அரசியல்
pudhucherrynarayanasamy.jpg

புதுச்சேரியில், சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரியில், நாராயணசாமியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியானது ஆட்சியில் உள்ளது. நாராணயசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில், ஏற்கனவே பிரச்சனை நிலவி வருகின்றது.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தத் சட்டம், குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகைப் பதிவேட்டினை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரப்படும் என, ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டமன்றத்தின் பாஜக நியமன எம்எல்ஏக்களான சாமிநாதன், சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் ஆளுநர் கிரண்பேடியிடம் மனுவினையும் அளித்தனர்.

ஆளுநர் கிரண்பேடியும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தினை எதிர்க்கக் கூடாது எனக் கூறினார். ஆனால், நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில், முதலமைச்சர் நாராயணசாமி இந்த சட்டங்களை எதிர்த்தும், புதுச்சேரிக்குள் தடை விதிப்பது குறித்தும், தன்னுடைய தீர்மானத்தினை முன் வைத்துப் பேசினார். பின்னர், வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

அதில், முதல்வரின் தீர்மானம் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில், எதிர்கட்சித் தலைவரான குமாரசாமி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS