அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் இருந்தது போல, ரோமேனியா நாட்டிலும் மெட்டல் தூண் இருந்ததால், விஞ்ஞானிகள் தற்பொழுது அச்சம் அடைந்து உள்ளனர்.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள பாறைகளுக்கு இடையில், யாருக்கும் தெரியாமல் சில்வர் மோனோலித்திக் தூணானது அடையாளம் காணப்பட்டது. இதனை ஹலிகாப்டர் மூலம், அம்மாகாணத்தினை கண்காணிக்கும் பொழுது கண்டுபிடித்தனர். இது எவ்வாறு அப்பகுதிக்கு வந்தது என்பது, யாருக்கும் புரியாதப் புதிராகவே இருந்து வந்தது. இந்த சூழலில், இதனை பல ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய ஆரம்பித்தனர்.
இந்த தூண் பெருமளவில் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், கடந்த 10 நாட்களுக்குள்ளேயே அது காணாமல் போய்விட்டது. அதனை, அமெரிக்காவின் அலுவல் அதிகாரிகள் தான், அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கின்றனர் எனப் பலரும் கூற ஆரம்பித்தனர். இந்த சூழலில், இதனை நாங்கள் அப்புறப்படுத்தவில்லை என, அதிகாரிகள் கூறியதால், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் பீதியானது ஏற்பட்டது. திடீரென்று உருவான தூண் எவ்வாறு மறைந்தது என, யாருக்கும் தெரியவில்லை.
இந்த சூழலில், இந்த தூணானது, ரொமேனியா நாட்டின் மலைப் பகுதியில் தோன்றியிருக்கின்றது. ரொமேனியாவின் நீமட் கவுண்டி பகுதியில் உள்ள மலைகளில், ஆள் நடமாட்டம் என்பது பொதுவாக இருக்காது. எப்பொழுதாவது தான், பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்லுவர். அப்படிப்பட்ட சூழலில், அங்குள்ள மலைகளில் ஒன்றில், இந்த மோனோலித்தானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் காணாமல் போய் வெறும் 24 மணி நேரத்திற்குள் இது, வேறொரு நாட்டில் தோன்றியிருப்பது குழப்பத்தினை ஏற்படுத்தி உள்ளது.
பலரும் இது வேற்றுக் கிரகவாசிகளின் செயல் எனவும், இது எவ்வாறு பூமியின் மற்றொரு பகுதிக்கு வெறும் 24 மணி நேரத்தில் சென்றது எனவும் குழப்பத்துடன் பேசி வருகின்றனர். சுமார் 9 அடி உயரமுள்ள இந்தத் தூணானது, திடீரென்று தோன்றியுள்ளதால், அப்பகுதியில் விஞ்ஞானிகள் குவிந்துள்ளனர்.