அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் புதிய குழப்பம்! மலைக்கு இடையில் ஏலியன்?

25 November 2020 அமானுஷ்யம்
utahmonolith.jpg

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் புதியதாக குழப்பம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. அதற்கு முக்கியக் காரணமாக, இருப்பது அங்குள்ள மலைகளுக்கு நடுவில் உள்ள மர்ம பொருளாகும்.

மர்மங்களைக் கண்டுபிடிப்பதற்கும், புதிய புதிய விடைத் தெரியாத மர்மங்களுக்கும் ஆதாரமாக இருப்பது அமெரிக்கா எனும் வல்லரசு தான். வட கொரியா, ரஷ்யா பற்றி யாருக்கும் தெரியாது என்றால், அமெரிக்கா பற்றி வெளியாகும் பெரும்பாலான செய்திகள் உண்மையானவையா, என்பது சந்தேகம் ஏற்படுத்தும் விஷயமாகும்.

அப்படி ஒரு விஷயமானது தற்பொழுது நடைபெற்று உள்ளது. அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ளது. அம்மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் பாலைவனம் ஒன்று அமைந்துள்ளது. அதில், சிறிய உயரமுள்ள மலைகளும் உள்ளன. அதனை அம்மாகாண பொதுமக்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் துறையானது, வழக்கம் போல கண்காணித்தது. ஒவ்வொரு வாரமும், இவ்வாறு கண்காணிப்புப் பணிகளை செய்வது வழக்கமாகும். அவ்வாறு கண்காணிக்கையில், புதியதாக 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புத் தூண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தத் தூணினை 2001 முதல் கண்காணித்து வருபவர்கள், இதுவரைப் பார்ததில்லை என்றுக் கூறி வருகின்றனர். இந்த தூணானது, பார்ப்பதற்கு வெள்ளியில் ஆனது போலவும், மிகவும் புதியதாகவும் உள்ளது. அது அங்கு எவ்வாறு வந்தது என்பதற்கான தடையமே இல்லை. இருப்பினும், அங்கு அந்த தூண் வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, தற்பொழுது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றன.

இதனைக் கண்டுபிடித்த விமானி கூறுகையில், கடந்த 2001ம் ஆண்டு முதல் இந்தப் பணியில் உள்ளேன். இது போன்ற ஒன்றினை நான் பார்தது இல்லை. இது ஒருவேளை வேற்றுக் கிரகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்? இது எவ்வாறு இங்கு வந்தது என்பதற்காக ஒரு சுவடும் இல்லை என்றுக் கூறியுள்ளார். இது அமெரிக்காவில், தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS