ஒரு காலத்தில் மொபைல் போன் என்றால், அனைவருக்கும் தெரிந்த ஒரே பெயர் நோக்கியா. அந்நிறுவனம் தற்பொழுது, மீண்டும் சந்தைக்கு வந்து பல மாடல் போன்களை வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில், தற்பொழுது புதிதாக ஸ்மார் டிவிக்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவியானது, 55 இன்ச் அளவுடன் வெளிவந்துள்ளது. இதில் 2.25 ஜிபி ராம், 16 ஜிபி ரோம் இணைக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 9.0 என்ற இயங்குதளத்துடன் வெளிவந்துள்ள இந்த டிவியானது, கூகுள் ஆன்ட்ராய்டு டிவியின் ஆப்களைப் பயன்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டிவியினை, பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து, நோக்கியா நிறுவனம் விற்க உள்ளது. இதன் விலை 41,999 ரூபாய் மட்டுமே. இந்த டிவியில் உலகப் புகழ் பெற்ற, ஜேபிஎல் நிறுவனத்தின் ஒலி வசதி இணைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.