இந்தியாவிற்கு புதிய நாடாளுமன்றம்! வரைவு மாதிரி வெளியானது!

20 January 2020 அரசியல்
newparliament.jpg

இந்தியாவில், ஆங்கிலேயர்கள் கட்டிய நாடாளுமன்றத்தினையே பயன்படுத்தி வருகின்றனர். இதனை விடப் பிரம்மாண்டமாக, பெரிய அளவிலான நாடாளுமன்றத்தினை உருவாக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

வருகின்ற 2022ம் ஆண்டுக்குள், புதிய நாடாளுமன்றம் கட்டியேத் தீர வேண்டும் என, மத்திய ஆளும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கானப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், அகமதாபாத் நகரினைச் சேர்ந்த ஹெச்.எஸ்.பி என்ற நிறுவனம், புதியதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்றத்திற்கான, டிசைன் உள்ளிட்ட யோசனைகளைத் தெரிவித்து உள்ளது.

அதன் யோசனைகள் ஏற்கப்படும் பட்சத்தில், இந்தியாவிற்கு 1350 இருக்கைகள் கொண்ட, பிரம்மாண்டமான நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. தற்பொழுது வட்ட வடிவில் உள்ள நாடாளுமன்றத்தினை விட, புதிதாகக் கட்டப்பட உள்ள நாடாளுமன்றமானது, முக்கோண வடிவில் இருக்கும். இரு அவையினைச் சேர்ந்த 900 எம்பிக்களும், இதில் அமரும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

மொத்தம், 1350 எம்பிக்கள் வரையில் இதில் அமரலாம். இந்த திட்டத்தினை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், கண்டிப்பாக 2022ம் ஆண்டுக்குள் இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விடும். மேலும், இந்தக் கட்டிடமானது, தற்பொழுது உள்ள நாடாளுமன்றத்தின் அருகிலேயே அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒருவேளை அப்படி அமைந்தால், பிரதமரின் அலுவலகம், வீடு முதலியவைகளின் இடமும் மாற்றமடையும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கட்டிடமானது 13 ஏக்கரில் மிகப் பிரம்மாண்டமானதாக உருவாக உள்ளது.

HOT NEWS