மற்றொரு புல்வமா தாக்குதலை தகர்த்த இந்திய இராணுவம்!

28 May 2020 அரசியல்
pulwamacarbomb.jpg

காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில், இன்று மாபெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில், நாற்பது இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். இந்த சூழ்நிலையில், இன்று புல்வாமா பகுதியில், காரில் இருந்த வெடிகுண்டினை, வெற்றிகரமாக செயலிழக்கச் செய்தனர்.

நேற்று ஜம்மூ-காஷ்மீர் பகுதியில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது, சந்தேகப்படும் விதமாக ஒரு கார் வந்தது. அந்த சான்ட்ரோ காரினை மடக்கியப் போலீசார், அந்தக் காரில் சோதனை மேற்கொண்டனர். அதில், ட்ரம் ஒன்று இருந்துள்ளது. அதில், வெடிகுண்டுகள் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இந்த காரின் எண்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டது. அந்தக் காரினை ஓட்டி வந்த தீவிரவாதி, காரினை அங்கேயே விட்டுவிட்டு, காட்டுக்குள் ஓடி ஒழிந்து விட்டான். இந்த சம்பவத்தால் சந்தேகமடைந்த போலீசார், பின்னர் தான் இந்தக் காரினைக் கைப்பற்றி சோதனை நடத்தியுள்ளனர். இந்தக் காரில் இருந்த வெடிகுண்டுகள் எப்படியும், 60 கிலோ இருக்கும் எனக் கணக்கிட்டுள்ளனர்.

பின்னர், அந்தக் காரினைப் பத்திரமாக அப்புறப்படுத்தி, அதனை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று, அதனை வெடிக்கச் செய்தனர். இந்த சம்பவத்தால், பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டு உள்ளது. இந்த காரில் உள்ள வெடிகுண்டுகளை ஆய்வு செய்த போலீசார், இது பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டு உள்ளதைக் கண்டறிந்து உள்ளனர்.

மேலும், அந்தக் காரில் பல இடங்களில் வெடிகுண்டுகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த சம்பவத்திற்கு ஜெய்ஈ முகம்மது மற்றும் லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகள் காரணமாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால், புல்வாமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

HOT NEWS