கொரோனா வைரஸானது, கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து உலகம் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. தற்பொழுது அந்த வைரஸானது, உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி இருக்கின்றது.
இது குறித்து, தினமும் பல ஆய்வு முடிவுகள் வெளியாகி வருகின்றன. சீனாவில் இருந்து இந்த வைரஸ் பரவினாலும், உலகம் முழுக்கப் பல ஆய்வு நிறுவனங்களும், நாடுகளும் இந்த வைரஸ் குறித்த ஆய்வுகளை தினமும் செய்து வருகின்றன. அதன்படி, அந்த ஆய்வுகள் குறித்த தகவல்கள் அனைத்தும் சயின்ஸ் அட்வான்ஸ் என்ற இதழிலில் வெளியான வண்ணம் உள்ளது.
இந்த இதழில் புதிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் மீது தற்பொழுது ஒரு ஆய்வு செய்யப்பட்டது எனவும், அந்த ஆய்வில் கொரோனா வைரஸானது தான் இருப்பதை, உடலில் வெளிப்படுத்த 8 நாட்கள் ஆகும் என்றும் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த ஆய்வானது, பல்லாயிரம் பேரிடம் நடத்தப்பட்டது எனவும், இதற்கு முன் கொரோனா வைரஸானது ஐந்து முதல் ஆறு நாட்களில் நம் உடலில் இருப்பதை நம்மால் கண்டறிய இயலும் என்றுக் கூறப்பட்டு வந்தது.
தற்போதைய ஆய்வின் முடிவினால், கொரோனா வைரஸ் சிகிச்சையில் பெரிய அளவில் மாற்றம் உண்டாகும் வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன.