தமிழகம் வரும் விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

25 May 2020 அரசியல்
edappadicm1.jpg

இன்று முதல் உள்நாட்டு விமான சேவை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து, விமானத்துறை புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல், மே-31ம் தேதி வரை, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பொதுப்போக்குவரத்து சேவையானது, தடை செய்யப்பட்டது. தற்பொழுது ஊரடங்கில் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகின்றது.

அதில், இன்று முதல் (மே-25ம் தேதி) உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பலரும் விமான சேவையைப் பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர். ஒவ்வொரு மாநிலமும், தங்கள் மாநிலத்தில் பின்பற்றப்பட வேண்டிய, புதியக் கட்டுப்பாடுகள் குறித்து, விமானப் பயணிகளுக்காக அறிவித்துள்ளது.

அதன்படி, மே 31ம் தேதி வரை விமான சேவையை இயக்க வேண்டாம் எனவும், இருப்பினும் 25 விமானங்களுக்கு அனுமதி அளித்தும் உள்ளது தமிழக அரசு. விமானத்தில் பயணம் செய்து வருபவர்கள், தங்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டும் எனவும், அனைத்து விமானப் பயணிகளின் கைகளிலும், 14 நாட்களுக்கான முத்திரை குத்தப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

அந்த நாட்களுக்கு தன்னை, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பானது அதிகரித்துக் கொண்டே இருப்பதால், தற்பொழுது விமான சேவைக்கு தடை விதித்துள்ளது தமிழக அரசு.

HOT NEWS