கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

18 March 2020 அரசியல்
coronavirusncov.jpg

நாடு முழுவதும், 137 பேர் தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த நோயானது மேலும் பரவாமல் இருக்க சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு.

அதன்படி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். தனியார் நிறுவன ஊழியர்கள், வொர்க் ப்ரம் ஹோம் மூலம், வீட்டில் இருந்தே வேலைப் பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும். ஆலோசனைக் கூட்டங்களை வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் நடத்தலாம்.

ஆன்மீகக் கூட்டங்களை பெரிய அளவில் நடத்தக் கூடாது. மக்கள் அனாவசியமாகப் பயணிக்கக் கூடாது. விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டும். விடுதிகளில், உடனடியாக சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தினமும் அதனைக் கண்காணிக்கவும் வேண்டும். புதிதாக எவ்வித நிகழ்ச்சிகளும் நடத்தவோ, அனுமதிக்கப்படவோ கூடாது. இடைவெளி விட்டு அனைவரும் பழகுவது நல்லது.

மருத்துவமனைகளில், இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கைக்குலுக்குவதைத் தவிர்க்கவும். தொட்டுப் பேசுவதைத் தவிர்த்தல் நல்லது. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். வதந்திகளை நம்பாமலும், அதனைப் பரப்பாமலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

HOT NEWS