நான்கு கேமிராக்களுடன் அசத்தும் சாம்சங் கேலக்ஸி எம்31!

26 February 2020 தொழில்நுட்பம்
samsungm31.jpg

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின்னர், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் போன் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட் போன், வருகின்ற மார்ச் மாதம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்னறது.

இந்த ஸ்மார்ட் போனானது, மிக நீண்ட திரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 6.4 இன்ச் டிஸ்ப்ளேயுடன், 1080x2340 பிக்சல் கிளாரிட்டியுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பிரேம், பிளாஸ்டிக் பேக் மற்றும் முன்பகுதி கிளாஸால் தயாரிக்கப்பட்டு உள்ளதால், இதன் எடை மிகவும் குறைவாக உள்ளது. சூப்பர் ஆமோ எல்ஈடி திரையானது, இதில் உள்ளது. இதனால், மிகத் துல்லியமாக அனைத்து வீடியோக்களையும் காண இயலும்.

இந்த ஸ்மார்ட் போனில், ஆன்ட்ராய்டு 10.0 இயங்குதளமானது உள்ளது. ஸைனோஸ் 9611 சிப் செட்டால் இந்த போன் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், ஆக்டாகோர் பிராசஸர் (Octa-core (4x2.3 GHz Cortex-A73 & 4x1.7 GHz Cortex-A53)) உள்ளதால், அனைத்து கடினமான செயல்களையும் நொடிப் பொழுதில் கையாள இயலும். மாலி ஜி72 என்ற கிராபிக்ஸ் கார்டு பயன்படுத்தப்பட்டு உள்ளதால், கடினமான கேம்கள், வீடியோக்களை எவ்வித கஷ்டமும் இல்லாமல் இயக்க இயலும்.

இந்த போனில், எக்ஸ்ட்ரா மெமரி கார்டு வசதியும் உள்ளது. அது தவிர்த்து, 6 ஜிபி ராம் 128 ஜிபி ரோம் வசதியும், அல்லது 6 ஜிபி ராம் 64 ஜிபி ரோம் வசதியுடன் இந்த போன் வெளியாக உள்ளது. இந்த போனில், பிங்கர்பிரிண்ட் சென்சார் வசதியும் உள்ளது. இதன் பேட்டரியானது 6000 என்ஏஹெச் அளவிற்கு சக்தி வாய்ந்தது. அதிவிரைவு சார்ஜ் செய்யும் வசதியும் இதில் இணைக்கப்பட்டு உள்ளது.

இந்தப் போனின் பிரதான அம்சமாக, கேமிரா உள்ளது. இதன் மெயின் கேமிரா பகுதியில், நான்கு கேமிராக்கள் உள்ளன. முதன்மையாக 64 எம்பி கேமிராவும் (64 MP, f/1.8, 26mm (wide), 1/1.72", 0.8µm, PDAF), பின்னர், 8எம்பி (8 MP, f/2.2, 12mm (ultrawide), 1/4.0", 1.12µm,), 5எம்பி (5 MP, f/2.2, 25mm (macro), 1/5.0", 1.12µm,), 5எம்பி (5 MP, f/2.2, (depth)) கேமிராவும் உள்ளன. 32 எம்பி செல்பி கேமிராவும் இந்த போனின் மிகப் பெரிய பலமாக உள்ளது. இதனால், பயனர்கள் தெளிவாகப் புகைப்படங்களை எடுக்க இயலும்.

இந்த ஸ்மார்ட் போனானது, 14,999 முதல் 15,999 வரையிலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதன் முறையாக, இவ்வளவு வசதியுள்ள ஸ்மார்ட்போனை, இந்த விலையில், சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS