வெளியான செயற்கைகோள் புகைப்படங்கள்! சீனாவின் சதித்திட்டம் அம்பலம்!

18 June 2020 அரசியல்
chinaflag.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சீனா தான் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரம் வெளியாகி உள்ளது.

சீனாவின் இராணுவத்தினர் கொடூரமாகத் தாக்கியதில், இந்தியாவின் 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால், இரு நாட்டிற்கு இடையிலும் பதற்றம் அதிகரித்து வருகின்றது. இதற்கு பலரும் தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், புதிய செயற்கைக்கோள் படங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளன.

அதில் சீன இராணுவம், கல்வான் பள்ளத்தாக்குக்கு அருகில் ஒரு பெரிய இராணுவ கட்டமைப்பினை உருவாக்கி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் தன்னுடைய செய்தி வலைதளத்தில் செயற்கைக்கோள் புகைப்படமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்பொழுது, சீன இராணுவம் அப்பகுதியில் ஏறி வந்து இருக்கலாம். மேலும், அவர்கள் இந்திய இராணுவத்தினரைத் தாக்கி இருக்கலாம். இவ்வாறு, இரு நாட்டு வீரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்து இருக்கலாம் என்றுக் கூறப்பட்டு உள்ளது. மேலும், உயரமான இடத்தில் இருந்து, இந்திய வீரர்கள் மீது பனிப்பாறைகளை சீன வீரர்கள் வீசித் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்றுக் கூறப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, இந்தியாவின் மீது பழி சுமத்தி வருகின்ற சீனாவின் செயல்கள் தற்பொழுது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பலரும் சீனாவினைப் பலரும் கண்டித்து வருகின்றனர்.

HOT NEWS