அமெரிக்கா-மெக்சிகோவிற்கு இடையில் இரகசிய சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு!

03 February 2020 அரசியல்
usmexicotunnel.jpg

அமெரிக்காவிற்கும், மெக்சிகோவிற்கும் இடையில், பெரிய அளவிலான சுரங்கப் பாதையானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும், மெக்சிகோவினர் போதைப் பொருட்களை விற்பதாகவும், அதனால், இரண்டு நாடுகளுக்கு இடையில் சுவர் எழுப்பப்படும் என, அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அவர் சொன்னபடியே, சுவர் எழுப்பப்பட்டது. இதனால், மெக்சிகோவினர் அமெரிக்காவிற்குள் நுழைவது குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நடந்த சம்பவங்களோ வேறு. மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு, இரகசியாக சுரங்கப் பாதை ஒன்றினை உருவாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,309 அடி நீளம் கொண்ட இந்த சுரங்கப் பாதையானது, மெக்சிகோவின் டிஜூவானா நகருக்கும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ பகுதிக்கும் இடையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்தப் பாதையில், இரயில் தண்டவாளங்களும் உள்ளன. மேலும், இளைப்பாறுவதற்கு மேஜைகள் மற்றும் நாற்காலிகளும் உள்ளன. இப்படி ஒரு சுரங்கம் இருப்பதை கடந்த ஆகஸ்ட் மாதமே, அமெரிக்கா கண்டுபிடித்து இருந்தாலும், அது எங்கு இருக்கின்றது. அதன் நுழைவாயில் எங்கு உள்ளது என யாராலும் கணிக்க இயலவில்லை. இதனிடையே, கடந்த புதன் கிழமை அன்று இதன் நுழைவாயிலைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சுரங்கமானது 5.5 அடி நீளமும், 2 அடி அகலும், 70 அடி ஆழமும் உடையதாக கட்டப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இதனை எத்தனைப் பேர் சேர்ந்து உருவாக்கினர். எவ்வளவு நாட்களாக இதனை உருவாக்கினர் என, தற்பொழுது விசாரித்து வருகின்றனர்.

HOT NEWS