ஆற்றுக்குள் சிவன் கோயில் கண்டுபிடிப்பு! ஆந்திராவில் அதிசயம்!

17 June 2020 அரசியல்
sivantemplefound.jpg

ஆந்திராவில் உள்ள ஆற்றுக்குள் இருந்த சிவன் கோயிலானது, தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலம் பென்னா நதிக்கரையோரம் மணல்குவாரி அமைக்கப்பட்டு உள்ளது. நெல்லூரில் இந்த குவாரியானது உள்ளது. அங்கு மணல் அள்ளும் பணியானது நடைபெற்று வருகின்றது. அவ்வாறு மணல் அள்ளிக் கொண்டு இருக்கும் பொழுது, மணல் அள்ளும் இயந்திரத்தில் ஏதோ மோதுவது போல சப்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து, மணல் அள்ளும் பணியானது நிறுத்தப்பட்டது.

ஏதோ தட்டுப்பட்டு இருப்பதை, அப்பகுதியில் வேலை செய்தவர்கள் கண்டறிந்தனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அதனையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் அங்கு சுற்றிலும் வேலி அமைத்து, அந்த மணலை அப்புறப்படுத்தி வருகின்றனர். அவ்வாறு செய்யும் பொழுது, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்து வந்த சிவன் கோயிலானது, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதனால், அங்கு மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும், அப்பகுதியில் ஆய்வாளர்கள் தற்பொழுது ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

HOT NEWS