20 ரூபாய் கொடுத்தால் மாற்று ரேஷன் கார்டு பெறலாம்!

25 January 2020 அரசியல்
rationcard.jpg

இணையத்தில் 20 ரூபாயினை செலுத்தி, மாற்று ரேஷன் கார்டினைப் பெறும் வசதியினை தற்பொழுது அரசு தொடங்கி வைத்துள்ளது.

கடந்த ஆண்டு, ஸ்மார்ட் கார்டு வசதியினை தமிழக அரசு அறிவித்தது. இதனால், ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டிற்கு அப்ளை செய்து, புதிய ரேஷன் கார்டுகளைப் பெறலாம். இந்நிலையில், ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு புதிய பக்கம் உருவாக்கப்பட்டது. இருப்பினும், அது செயல்பாட்டிற்கு வராமலேயே இருந்து வந்தது. தற்பொழுது, இந்தப் பிரச்சனையானது முடிவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில், திருத்தங்களை மேற்கொள்ள மற்றும் தொலைந்து விட்டால் புதிதாக விண்ணப்பிக்க www.tnpds.gov.in இந்த இணையதளத்திற்குச் சென்று, விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு தயாரானதும், சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரியின் அனுமதி பெற்று, அனுப்பி வைக்கப்படும். ரெடியானதும், 20 ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS