அயோத்தியில் ஏற்கனவே ராமர் கோயில் இருந்ததா? பழைய சிற்பங்கள் கிடைத்துள்ளன!

22 May 2020 அரசியல்
rammandir1.jpg

அயோத்தியில் ஏற்கனவே இருந்த சிவ லிங்கம் உட்பட, தொன்மையான பொருட்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

கடந்த 2019ம் ஆண்டு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு எவ்வித தடையும் இல்லை என, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. மேலும், அந்த கோயிலைக் கட்டுவதற்கு அடுத்த மூன்று மாதத்திற்குள் டிரஸ்ட் ஒன்றினை ஏற்பாடு செய்ய வேண்டும் என, மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது.

இதனைத் தொடர்ந்து, பாரதப் பிரதமர் மோடியின் முன்னாள் தலைமை செயலாளரான நிர்தியா கோபால் தாஸ் தலைமையில், கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டது. அவர் தலைமையில், அயோத்தில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கானப் பணிகள் அனைத்தும், கடந்த பிப்ரவரி 29ம் தேதி 2020ம் ஆண்டின் பொழுது தொடங்கியது.

அந்தக் கோயிலினைக் கட்டுவதற்கான மாதிரிகள் அனைத்தும், அந்தப் பகுதியில் தற்பொழுது சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணியின் பொழுது, சுமார் நான்கு அடி உயரமுள்ள சிவ லிங்கம், ஏழு கருங்கல்லால் ஆன தூண்கள், ஆறு சிவப்பு கல்லால் ஆன தூண்கள் உட்பட பல விஷயங்கள் கண்டறியப்பட்டன. இது தற்பொழுது உறுதியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் ஏற்கனவே பண்டையக் காலத்தில் கோயில்கள் இருந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த சம்பவம், தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS