சென்னையில் ஒட்டப்படும் கொரோனா வைரஸ் ஸ்டிக்கர்! அரசு உத்தரவு!

23 March 2020 அரசியல்
coronasticker.jpg

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ளவர்களின் வீடுகளில், தற்பொழுது தமிழக அரசு புதிய ஸ்டிக்கர் ஒன்றினை ஒட்டி வருகின்றது. இது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், மாவட்ட அதிகாரிகள் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் விவாதித்தனர். அதன்படி, தற்பொழுது புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்துள்ள 3,000 பேரின் வீடுகளில், பச்சை நிற ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்படுகின்றது. அதில், கொரோனா தொற்று, உள்ளே நுழையாதே என எழுதப்பட்டு இருக்கும். தனிமைப்படுத்தப்பட்ட வீடு எனவும், தனிமைப்படுத்தப்பட்டவரின் பெயர், எங்கிருந்து வந்தார். அவருடைய வயது, வீட்டில் யார் யாரெல்லாம் உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

வெளிநாட்டில் இருந்து வந்துள்ள தமிழர்கள், வெளியில் நடமாடக் கூடாது எனவும், தடைகளை மீறி வெளியில் நடமாடினாலோ, ஒட்டியுள்ள ஸ்டிக்கர்களை கிழித்தாலோ, அவர்களின் பாஸ்போர்ட்டானது முடக்கப்படும் எனவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

HOT NEWS