கொரோனா புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு! அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்!

28 April 2020 அரசியல்
coronasymptoms.jpg

கொரோனா வைரஸானது, புதிய அறிகுறிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுக்க 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதிலிருந்து வெறும், 9 லட்சம் பேர் மட்டுமே மீண்டுள்ளனர். இந்த வைரஸால், இரண்டு லட்சத்து 20 ஆயிரம் பேர் மரணமடைந்து உள்ளனர்.

இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த வைரஸானது, பலருக்கும் அறிகுறிகள் எதையும் வெளிப்படாமல் பரவி வருவது கண்டறியப்பட்டு உள்ளது. அதே போல், புதிய அறிகுறிகளுடனும் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனை அமெரிக்க மருத்துவக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காய்ச்சல், உடல்சோர்வு, வரட்டு இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தான் தற்பொழுது வரை இந்த கொரோனா வைரஸின் அறிகுறிகளாக இருந்து வந்தது. இந்நிலையில், புதிய அறிகுறிகளாக, உடல்வலி, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவைகளும் புதிய அறிகுறிகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன.

மேலும், இந்த வைரஸ் தொற்று இருப்பதை, ஐந்து முதல் ஆறு நாட்கள் கழித்தே அறிய இயலும். ஆனால், அறிகுறிகள் வெளிப்பட எப்படியும் 14 நாட்கள் ஆகும் எனக் கூறப்பட்டு வருகின்றது.

HOT NEWS