8ம் வகுப்பு தேர்வு! பாடத் திட்டம் மாற்றி அமைப்பு! அமைச்சர் அறிவிப்பு!

06 November 2019 அரசியல்
sengottaiyan1.jpg

அடுத்த ஆண்டு முதல், எட்டாம் வகுப்பிற்கு, மூன்று பருவத் தேர்வு முறை ரத்து செய்யப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக, தமிழக மாணவர்கள் தயாராகி வருகின்றனர். மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும், மூன்று பருவ பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்படி, மூன்று பருவத்திற்கும் தனித் தனியாக புத்தகம் வழங்கப்படுகின்றது. முதல் பருவத்திற்கு படித்தவை, முழு ஆண்டுத் தேர்விற்கு பயன்படாது. ஆனால், பொதுத் தேர்விற்கு அப்படி செய்ய இயலாது.

இதனையடுத்து, முதல் பருவம் முதல் மூன்றாவது பருவம் வரை உள்ள புத்தகத்தை தற்பொழுது எப்படி இணைத்து கேள்வி கேட்பது என, பள்ளிக் கல்வி இயக்குநரகம் ஆய்வு செய்து வருகின்றது. அதே போல், அடுத்த ஆண்டு, எட்டாம் வகுப்பிற்கு முப்பருவத் தேர்வு கிடையாது எனவும், பழைய வழக்கப்படி, அதாவது முதல் நாள் தொடங்கி, கடைசி நாள் வரை ஒரே புத்தக்கம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அப்படி இருந்தால் தான், பொதுத் தேர்வினை குழப்பமின்றி நடத்த இயலும் என்பதாலும், சரியான கேள்விகளையும் கேட்க முடியும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினையும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

HOT NEWS