சீனாவினை வீழ்த்த பிரம்மபுத்திராவிற்கு அடியில் சுரங்கப் பாதை! இந்திய அரசு ஒப்புதல்!

24 July 2020 அரசியல்
underwaterbridge.jpg

பிரம்மபுத்திரா நதிக்கு அடியில், பிரம்மாண்டமான சுரங்கப்பாதையினை உருவாக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது லடாக் பகுதியில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதியில் இந்திய இராணுவம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த 1962ம் ஆண்டு நடைபற்ற இந்திய சீனப் போரில், சீன இராணுவம் இந்த பிரம்மபுத்திரா நதி வழியாகத் தான், இந்தியாவிற்குள் ஊடுறுவியது.

இதனைக் கருத்தில் கொண்டு, தற்பொழுது இந்த நதிப் பகுதியினை பாதுகாக்கும் பொருட்டு, புதிய திட்டத்தினை மத்திய அரசு தீட்டியுள்ளது. அதன்படி, பிரம்மபுத்திர நதிக்கு அடியில், புதிதாக சுரங்கம் ஒன்றினைக் கட்டவும், அத்துடன் அந்த சுரங்கத்திற்குள் எட்டு வழிச்சாலையினை மிக நீளமாக அமைக்கவும் உருவாக்க அனுமதி வழங்கி உள்ளது.

இந்த திட்டம் முழுமைப் பெற்றால், இந்திய இராணுவத்தால் அந்த சுரங்கத்தின் வழியாக, மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய இயலும். இந்தப் பணிக்கு முக்கியக் காரணமாக இருந்தது போக்குவரத்து பாலங்களே ஆகும். சீனாவினைத் தாக்க, இந்தியாவின் இராணுவத்தினர் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள ஆறுக்கும் மேற்பட்ட பாலங்களையே நம்பி உள்ளனர்.

ஒருவேளை சீன இராணுவம் இந்தப் பாலங்களை வெடி வைத்து தகர்த்தால், இந்திய இராணுவத்தால் அப்பகுதிக்குள் நுழைய முடியாது. இதனைக் கருத்தில், கொண்டு அவசர அவசரமாக இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சீனாவின் திபெத் பகுதியில் உருவாகும் பிரம்மபுத்திரா நதியானது, இந்தியாவிற்குள் பாய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS