விரைவில் மக்கள் நீதி மய்யம் தொலைக்காட்சி! கட்சித் துணைத்தலைவர் அறிவிப்பு!

31 August 2019 சினிமா
maiammahendran.jpg

விரைவில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக, பொதிய தொலைக்காட்சி உருவாக்கப்படும் என, அக்கட்சியின் துணைத் தலைவர் திரு. மகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மக்கள் நீதி மய்யத்திற்காக விரைவில் ஒரு டிவி சேனல் உருவாக்கப்பட உள்ளது எனவும், சட்டசபைத் தேர்தலுக்காக நவம்பர் மாதத்தில் பிரச்சாரத்தை கமல்ஹாசன் தொடங்க உள்ளார் எனவும் கூறியிருந்தார்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு டிவி சேனல் இருக்கும் பொழுது, நம் கட்சிக்கும் ஒரு டிவி சேனல் இருக்க வேண்டும் என, மக்கள் நீதிமய்யத்திற்கு ஒரு டிவி சேனலை வாங்கியுள்ளனர். புதியதாக ஒரு சேனலை உருவாக்காமல், மாறாக தற்பொழுது தொடங்கப்பட்ட ஒரு டிவி சேனலை வாங்கியுள்ளதாக, நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்படி இருப்பினும், வரும் கமல்ஹாசன் பிறந்தநாள் முதல் அந்த டிவி சேனல் புதிய பரிமாணத்துடன் ஒளிபரப்பாகும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.

HOT NEWS