மோட்டார் வாகனச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது!

01 September 2019 அரசியல்
car.jpg

மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. திருத்தி அமைக்கப்பட்ட (2019) வாகனச் சட்டம், மத்திய அமைச்சரவையில் நிதின்கட்கரி கொண்டு வந்தார். இந்நிலையில், அதற்கு ஆதரவு கிடைத்து. இதனை முன்னிட்டு, வாகனச் சட்டம் திருத்தப்பட்டது.

திருத்தப்பட்ட வாகனச் சட்டத்தின் படி, இனி அபராதம் பல மடங்கு உயர்த்தப்படும். குடித்து வாகனம் ஓட்டினாலும், ஆம்புலன்ஸிற்கு வழி விடாமல் வாகனம் ஓட்டினாலும், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

அதி வேகமாக வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும். இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால், 1000 ரூபாய் அபராதமும், மூன்று மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட உள்ளது.

டிராபிக் சிக்னலில் நிக்காமல் சென்றால் இதுவரை 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தற்பொழுது அது, 500 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. வாகன உரிமம் இல்லாமலும், விதிகளுக்குக் கட்டுப்படாமலும் வாகனம் ஓட்டினால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் 12 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டினால், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அது தற்பொழுது 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி ஹெல்மட் போடாமல் வாகனங்களை எடுக்க வேண்டாம். விதிகளை மீறவும் வேண்டாம்.

HOT NEWS