கொரோனா வைரஸிற்கு புதிய வென்டிலேட்டர்! விஞ்ஞானி சாதனை!

28 March 2020 அரசியல்
hospitalpatient.jpg

கொரோனா வைரஸிற்கு சிகிச்சை அளிப்பதற்காக, புதிய வென்டிலேட்டரை உருவாக்கி, இங்கிலாந்து விஞ்ஞானி சாதனைப் படைத்துள்ளார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சுமார் இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள், மூச்சு விடத் திணறுவர். அதனால், அவர்கள் மூச்சுவிட உதவியாக வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் மாருதி சுசுகி மற்றும் அமெரிக்காவின் போர்ட் நிறுவனங்களே, பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. திடீரென்று வேகமாக இந்த வைரஸ் பரவி வருகின்றதால், தங்களால் அதிகளவில் தயாரிக்க இயலாது என அந்த நிறுவனங்களும் கூறியுள்ளன. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள ஜேம்ஸ் டைசன் என்பவர், தன்னுடையப் புகழ்பெற்ற நிறுவனமான டைசன் நிறுவனத்தின் மூலம், புதிய வகை வென்டிலேட்டரை உருவாக்கி உள்ளார்.

இதனைப் பயன்படுத்தி, பத்தே நாட்களில் கொரோனா பாதிப்பினை சரி செய்ய இயலும் எனவும் கூறியுள்ளார். இதற்கு அனுமதி அளித்துள்ள இங்கிலாந்து அரசாங்கம், 10000 வென்டிலேட்டர்களை உருவாக்க ஆர்டரும் கொடுத்துள்ளது. இதனால், குஷியான அந்த நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளுக்கு, தங்களால் தயாரிக்கப்படும் 5,000 வென்டிலேட்டர்களை இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளது.

HOT NEWS