சேரிகளை மறைக்க சுவர்! டிரம்பின் வருகையையொட்டி வேலைகள் தீவிரம்!

18 February 2020 அரசியல்
gujaratwall.jpg

வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு சுற்றுலா வருகின்றார். இதற்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

டெல்லி மற்றும் அகமதாபாத்தில் அவர் உரையாற்றுவார் என, எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், குஜராத்தில் உள்ள அகமதாபாத்திற்கு அவர் வருகின்றார் எனவும், அங்குள்ள மோதிரா மைதானத்தில், அவர் ஒன்றரை லட்சம் மக்களின் முன்னிலையில் உரையாற்றுவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக, இந்த மைதானம் முழுவீச்சில் தயாராகி வருகின்றது. இதற்கிடையே, பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள குடிசைப் பகுதிகளைத் தாண்டித் தான், டிரம்ப் செல்ல வேண்டி இருக்கின்றதாம். அவர் செல்லும் பொழுது, அவருடையக் கண்ணில் இந்தக் குடிசைகள் தெரியாமல் இருக்க, ஒரு பெரிய சுவரினை தற்பொழுது கட்டி வருகின்றனர்.

இது குறித்த புகைப்படங்கள், தற்பொழுது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், முன்பெல்லாம், பெரிய திரை கொண்டு தான், எங்களை மறைப்பர். இப்பொழுது, நிரந்தரமாக சுவரினையேக் கட்டுகின்றனர் என, வேதனை தெரிவித்தார்.

தன்னுடைய சொந்த மக்களை, டிரம்ப் பார்த்துவிடக்கூடாது என, சுவர் கட்டுகின்றார் என, எதிர்கட்சிகள் பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனம் வைக்கின்றன எதிர்கட்சிகள். ஆனால், அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல், தற்பொழுது சுவர் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளும், பெரிய அளவில் தேவைப்படும் என்பதால், இந்த பயணமானது, அதிபர் டிரம்பிற்கு முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையிலும், பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, ஒரு ஜென்டில்மேன் எனவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS