அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழி மாணவர் சேர்க்கை!

13 July 2020 அரசியல்
kpanbalagan1.jpg

இந்த ஆண்டு கல்லூரிகளில் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கையானது, ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சரவை கூறியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி, தற்பொழுது வரை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில், கல்லூரிகளில் 2020-2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையானது, எப்பொழுது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் வருகின்ற ஜூலை 27ம் தேதியுடன் முடிவடைகின்றன. அதனைத் தொடர்ந்து, வருகின்ற ஆகஸ்ட் மாதம், 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புப் படித்த மாணவர்களின் மதிப்பெண்கள் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூழ்நிலையில், தற்போதையக் கல்வியாண்டில் எவ்வாறு மாணவர்கள், வெளியில் சுதந்திரமாக நடமாட முடியும் எனவும், கல்லூரிகளில் சேர இயலும் எனவும் கேள்விகள் எழுந்தன.

அதுமட்டுமின்றி, இன்னும் கொரோனா தொற்று முடிவடையாத நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், மாணவர்களின் படிப்பு என்னவாகும் என்றக் கேள்வி எழுந்துள்ளது. அதற்கு தீர்வு காணும் விதத்தில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க. அன்பழகன் தற்பொழுது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இன்னும் இரண்டு நாட்களில் புதிய வலைதளம் ஒன்று உருவாக்கப்படும் எனவும், அதன் மூலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கையானது, ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். இது தற்பொழுது, பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS