கீழடியில் எடைகற்கள் கண்டுபிடிப்பு! அறிவியலிலும் முன்னேறியிருந்த கீழடி சமூகம்!

07 July 2020 அரசியல்
keeladiweightballs.jpg

கீழடியில் நடைபெற்று வருகின்ற ஆறாவது கட்ட அகழ்வாய்வில், வித்தியாசமான எடைக் கற்கள் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, மணலூர் மற்றும் அகரம் ஆகிய பகுதிகளில், தற்பொழுது ஆறாவது கட்ட அகழ்வாய்வுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2 மாதங்களாக இப்பகுதிகளில் நடைபெறும் ஆய்வுகளில், பல விசித்திரமான பொருட்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன.

இங்கு தற்பொழுது நடைபெற்று வருகின்ற ஆய்வில், இரும்பு உலை அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆய்வாளர்கள் அப்பகுதியில் மிகத் தீவிரமாகவும், எவ்வித சேதமும் ஏற்படாத வகையிலும், பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தி வருகின்றனர். அதில், தற்பொழுது புதிதாக எடைக் கற்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

இந்த எடைக் கற்கள் 8 கிராம், 18 கிராம், 150 கிராம், 300 கிராம் உள்ளிட்ட எடைகளில் உள்ளன. இந்தப் பகுதியில் ஏற்கனவே தொழில்கள் நடைபெற்று இருப்பதாக, ஆய்வாளர்கள் நடைபெற்று உள்ளன. குறிப்பாக இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் நடைபெற்று இருக்கலாம் என்றுக் கணித்துள்ளனர். இந்தப் பகுதியில், இரும்புத் துண்டுகள், கண்ணாடி கசடுகளும் கண்டறியப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS