கீழடியில் தமிழகத்தின் மிக பெரிய உறைகிணறு! 32 அடுக்கு உறைகிணற்றால் ஆய்வாளர்கள் நெகிழ்ச்சி!

06 October 2020 அரசியல்
keeladikinaru.jpg

தற்பொழுது தமிழகத்தின் மிகப் பெரிய உறைகிணறானது, கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, அங்கு ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்திற்கு அருகில் உள்ள கீழடிப் பகுதியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த ஆய்வுகள் நடைபெற்றன. அதில், பலவிதப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 32 அடுக்கு உறைகிணறு ஒன்றும் கண்டறியப்பட்டது. 20வது குழியில் இந்தக் கிணறு இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த 30ம் தேதி வரை 16 அடுக்குகள் வரைக் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இது தற்பொழுது 32 அடுக்கு வரை இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த அடுக்குகளில், ஒவ்வொரு அடுக்கும் சுமார் 25 செமீ உயரம் உள்ளவையாக உள்ளன. இதுவரை திருவள்ளூர் மாவட்டம் பெரும்புதூரில் தான் 28 அடுக்குகளுள்ள உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. தற்பொழுது 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது, ஆச்சர்யத்தினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS