திஷாவிற்கு நடந்த அநீதியைப் போல வேறு யாருக்கும் நடக்காமல் இருக்க, ஆந்திரப் பிரதேசத்தில் விரைவில் ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
அவர் பேசுகையில், ஜீரோ எப்ஐஆர் மூலம் இனி எந்த காவல்நிலையத்திலும் பெண்கள் புகார் கொடுக்கலாம். பெண்களுக்கு எதிராக ஏதேனும் குற்றம் நிகழ்த்தப்பட்டால், கண்டிப்பாக 21 நாட்களுக்குள் தண்டனை வழங்கப்படும் எனவும் கூறினார். தெலுங்கானாவில் நிகழ்ந்த என்கவுண்டர் சம்பவம் குறித்துப் பதிலளித்த ஜெகன், சினிமாவில் எண்கவுண்டரைப் பார்த்தால் நாம் ரசிக்க்கின்றோம். ஆனால், நேரடியாக நிகழ்ந்தால், அதற்காக உடனடியாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓடி வந்து விடுகின்றது.
பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களை ஒரே வாரத்தில் விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு, சரியாக மூன்று வாரங்களுக்குள் தண்டனை வழங்கப்பட வழிவகை செய்யப்படும். தற்பொழுது வரை, நம்முடைய அரசு சட்டத்திற்குப் புரம்பாக, திருட்டுத்தனமாக சாராயம் விற்ற 43,000 கடைகளை மூடியுள்ளது எனவும் கூறியுள்ளார்.