நியூயார்க்கில் புதைத்து மூடப்படும் பிணங்கள்! புகைப்படம் லீக்கானது!

11 April 2020 அரசியல்
hartisland.jpg

அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி மாகாணங்களில், கொரோனா வைரஸ் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். உண்மையைக் கூற வேண்டும் என்றால், இந்த இரு மாகணங்கள் தான், அமெரிக்காவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த மாகாணங்களில், தினமும் ஆயிரம் பேர் மரணமடைந்து வருகின்றனர். மருந்துகளுக்கும், மருத்துவர்களுக்கு மட்டுமல்ல, பிணத்தினை புதைப்பதற்கும் தற்பொழுது கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில், சமாதிகள் அமைக்க முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ரோட்டில் தனியாக வசித்து வந்த பலரும் மரணமடைந்து வருவதால், அவர்கள் உடலானது சாலையோரங்களில் கிடக்கின்றது.

இதனால், அவர்களுடைய உடல்களை ஹார்ட் தீவில் அடக்கம் செய்கின்றனர். பொதுவாக ஹார்ட் தீவில், வாரத்திற்கு 25 பிணங்கள் தான் வருமாம். யாரும் இல்லாத, அநாதையாக வருகின்ற அந்தப் பிணங்களை எடுத்து, அரசு சார்பில் இந்த தீவுகளில் புதைப்பது வழங்கமாக உள்ளது. ஆனால், தற்பொழுது பல ஆயிரம் பேர் மரணமடைவதால், இங்கு வரும் பிணங்களின் அளவும் அதிகமாகி உள்ளது.

தற்பொழுது தினமும் 25 முதல் 30 பிணங்கள் இந்த தீவிற்கு வருகின்றதாம். அனைத்தும் அநாதைப் பிணங்கள் என, அப்பகுதியில் வேலை செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை, அமெரிக்க செய்தி நிறுவனம் தற்பொழுது புகைப்படம் எடுத்துள்ளது. இதுவரை, இவ்வளவு அளவிற்கு, பிணங்கள் வந்தது கிடையாதாம். ஹார்ட் தீவு வரலாற்றிலேயே, இந்த காலக் கட்டம் தான் முதல் முறையாம்.

2008ம் ஆண்டு தான், இந்தத் தீவினைத் தற்காலிக கல்லறையாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அப்பொழுது வந்த நோயினால் இறந்தவர்களின் உடலினையும், இங்கு தான் புதைத்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டு உள்ளனர். இந்த வைரஸால், கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் மரணமடைந்து உள்ளனர்.

HOT NEWS