அடுத்த ஆண்டு முதல், இந்தியாவில் 5ஜி சேவையானது புழக்கத்திற்கு வரும் என, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து உள்ளார்.
இன்று அகில இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியானது நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய முகேஷ் அம்பானி, 2016ம் ஆண்டு ஜியோ தன்னுடைய 4ஜி சேவையினை, இந்தியாவில் வழங்க ஆரம்பித்தது. தற்பொழுது இந்தியாவிலேயே அதிக சந்தாதாரர்களைக் கொண்டதாக மாறியுள்ளது. வருகின்ற 2021ம் ஆண்டில், ஜியோ நிறுவனமானது, தன்னுடைய 5ஜி சேவையினை வழங்க ஆரம்பித்து விடும். அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
வருகின்ற 2021ம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே இது நடைமுறைக்கு வரும். அதே போல், ஜியோ ஸ்மார்ட்போன்களும், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. அதுவும், 2021ம் ஆண்டின் முதல் காலாண்டில் பயன்பாட்டிற்கு வரும் என்றுக் கூறியுள்ளார். அதன் விலையானது தற்பொழுது 4,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்து உள்ளார். இதனால் ஜியோ முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.