நெய்வேலியில் விபத்து! 7 பேர் பலி! 18 பேர் படுகாயம்!

01 July 2020 அரசியல்
nlcboilerblast.jpg

நெய்வேலியில் உள்ள என்எல்சி மின்சாரம் தயாரிக்கும் மையத்தில், பாய்லர் வெடித்ததில் 7 பேர் பலியாகினார். மேலும், 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அனல் மின்சார நிலையத்தில் அமைந்துள்ள, இரண்டாவது அனல் மின் நிலையத்தில், இன்று திடீரென்று பாய்லர் வெடித்து தீ பிடித்தது. அங்கு 7 மின் அலகுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த பாய்லர் வெடித்ததால் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உடல் கருகி பலியாகினர். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரும் பலியாகி உள்ளனர். இவர்களின் மறைவுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு தலா 3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரித்தார். மேலும், மரணமடைந்தவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

HOT NEWS