நிர்பயா வழக்கில் மனு அளித்த குற்றவாளி! தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

15 January 2020 அரசியல்
nirbhayacase.jpg

டெல்லியில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட நிர்பாய வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரில், முகேஷ் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவினை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும், வருகின்ற 22ம் தேதி அன்று, தூக்குதண்டனை வழங்கப்படும் என, உச்சநீதிமன்றம் இந்த வழக்கில், தண்டனை வழங்கும் தேதியினை அறிவித்து இருந்தது. இதனையடுத்து, நிர்பயா வழக்கில் வாய்மை வென்றது என, நிர்பயாவை இழந்த அவருடைய பெற்றோர் தெரிவித்தனர்.

இந்நிலையில், தூக்குத் தண்டனைக் கைதிகளுள் ஒருவரான முகேஷ் சிங், தன்னுடைய தண்டனையை நிறுத்தி வைக்கும்படி, நீதிமன்றத்தில் தன் சார்பில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், தண்டனையை நிறுத்துவதற்காக தாக்கல் செய்யப்பட்டது போல், இந்த மனு உள்ளது. எனவே, இந்த மனுவானது தள்ளுபடி செய்யப்படுகின்றது எனக் கூறியது.

ஏற்கனவே, தன்னுடைய கருணை மனுவினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பியுள்ளார் முகேஷ் சிங். இருப்பினும், குடியரசுத் தலைவர் தரப்பில் இருந்து, எவ்வித பதிலும் இன்னும் வராத நிலையில், உச்சநீதிமன்றத்தில், தண்டனைக் காலத்தினை தாமதமாக்க இந்த மனுவினை தாக்கல் செய்தார். தேவைப்பட்டால், விசாரணை நீதிமன்றத்திலேயே குற்றவாளியான முகேஷ் சிங், தன்னுடைய மனுவினைத் தாக்கல் செய்யலாம் என, உச்சநீதிமன்றம் கூறியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS