நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை நாள் அறிவிப்பு!

11 March 2020 அரசியல்
nirbhayacase.jpg

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயா வழக்கில், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாளினை, நீதிமன்றம் இறுதியாக உறுதிப்படுத்தியது.

பிப்ரவரி மாத ஆரம்பத்திலேயே, இவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால், குற்றம் சுமத்தப்பட்ட நான்கு குற்றவாளிகளும், தொடர்ந்து கருணை மனு, தண்டனையைக் குறைக்கக் கோரி மனு உள்ளிட்டப் பல மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வந்தனர். குடியரசுத் தலைவருக்கும், தங்களுடையக் கருணை மனுவினை அளித்தும் வந்தனர்.

இதனால், அவர்களுடையத் தூக்குத் தண்டனையானது நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில், நிர்பயாவின் தாயார், நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், குற்றவாளிகள் தண்டனையை தாமதப்படுத்தவே இத்தகையச் செயல்களைச் செய்கின்றனர் எனவும் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், குற்றவாளிகளின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

குடியரசுத் தலைவரும், கருணை மனுவினைத் தள்ளுபடி செய்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை நாளினை அறிவித்தது. அதன்படி, அந்த நான்கு குற்றவாளிகளுக்கும் வருகின்ற மார்ச் மாதம் 20ம் தேதி அன்று, காலை எட்டு மணிக்கு தூக்கிலிடப்படுவர் என்று கூறியுள்ளது. இதனால், அவர்கள் வருகின்ற 20ம் தேதி அன்று, தூக்கிலிடப்படுவது உறுதியாகி உள்ளது.

HOT NEWS