என் மகளுடைய மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்! நிர்பயா தாயார் கண்ணீர்!

18 January 2020 அரசியல்
nirbhayamother.jpg

என் மகளுடைய மரணத்தினை வைத்தும், அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என, நிர்பயாவின் தாய் கண்ணீர் மல்கப் பேட்டியளித்துள்ளார்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து உச்சநீதிமன்றம். இதனிடையே, வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை ஆறு மணிக்கு, தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது டெல்லி நீதிமன்றம்.

இதனையடுத்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணி, ஆம் ஆத்மி ஆட்சியில் இருப்பதால் தான் தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என பேசினார். இதனிடையே ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, நிர்பயாவின் தாயார் பேசுகையில், பாஜகவினர் பெண்களின் பாதுகாப்பு பேசினர். 2014ல் ஆட்சிக்கு வந்தனர். இப்பொழுது, ஆம் ஆத்மி கட்சியுடன் சண்டையிடுகின்றனர். என் மகளின் மரணத்தில் கூட, அரசியல் பேசுகின்றனர் என்றார். குற்றவாளிகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி, ஜனவரி 22ம் தேதியே தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

HOT NEWS