அமெரிக்காவின் நிறுவனங்களை ஈர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்-நிர்மலா சீதாராமன்!

21 October 2019 அரசியல்
nirmala.jpg

சீனாவில் இருந்து வெளியேறி வரும், அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே, பொருளாதாரம் சார்ந்த நல்லுறவு இல்லை. ஆனால், இராணுவம் மற்றும் நட்பு ரீதியிலான உறவு முறை நன்றாக உள்ளது.

அமெரிக்காவில் பல இரும்பு மற்றும் அலுமினியம் சார்ந்த, இந்தியப் பொருட்கள் மீது அதிகளவில் வரி விதிக்கப்படுகின்றது. இதனால், நம்மால் பெரிய அளவில் ஏற்றுமதி செய்ய இயலவில்லை. அதே போல, பொறியியல், விவசாயம் மற்றும் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா விரும்புகின்றது.

அதற்கு தேவையான சாத்தியக் கூறுகள் குறித்து, அமெரிக்க கருவூலக அதிகாரி ஸ்டீவன் மனூசினிடம் பேசியுள்ளேன். இது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அவர் வரும் நவம்பர் மாதம் டில்லிக்கு வருகின்றார். தற்பொழுது, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் பொருளாதார ரீதியிலான பிரச்சனை நிலவி வருகின்றது. இதனால், அங்கிருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன.

அவ்வாறு வெளியேறி வரும் நிறுவனங்களை, இந்தியாவில் முதலீடு செய்ய நாம் அழைக்க முயற்சி செய்ய உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS