நான் அதிக வெங்காயம் சாப்பிடுவதில்லை! நிதியமைச்சர் நக்கல்!

05 December 2019 அரசியல்
nirmalasitharaman1.jpg

நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற காரசாரமான விவாதத்தின் பொழுது, நான் அதிகமாக வெங்காயம் சாப்பிடுவதில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். இதனால், நாடாளுமன்றத்தில் சிரிப்பலை பரவியது.

வெங்காயத்தின் விலை, வரலாறு காணாத வகையில், அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொல்கத்தாவில் அதிகபட்சமாக 150 ரூபாய்க்கும், பிற மாநிலங்களில் 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரைக்கும் வெங்காயம் விற்கப்படுகின்றது.

இந்தியாவின் வெங்காய உற்பத்தியானது, மஹாராஷ்டிராவினைத் தான் நம்பி உள்ளது. ஆனால், அங்கு பெய்த கனமழையின் காரணமாக, அங்கு விதைக்கப்பட்ட வெங்காயங்கள் அனைத்தும் அழுகி விட்டன. இதனால், வெங்காய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாகவே, இந்த வெங்காய தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், தற்பொழுது இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது.

இது பற்றி, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்பினர். மத்திய அரசு, வெங்காயத்தின் விலையினை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டின. அதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நான் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பதில்லை எனத் தெரிவித்தார். இதனால், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிரித்து விட்டனர்.

மேலும் பேசிய சீதாராமன், வெங்காயம் சாப்பிடுவதால், அதிக அளவில் எரிச்சல் உண்டாகும் எனவும், நான் அதிகமாக வெங்காயத்தினைப் பயன்படுத்தும் குடும்பத்தில் இருந்து வரவில்லை எனவும் தெரிவித்தார்.

HOT NEWS