கடுமையான கடன் பிரச்சனையில் சிக்கி, தற்பொழுது இந்தியாவின் தனியார் வங்கிகளுள் ஒன்றான, எஸ் பேங் தவித்து வருகின்றது. இதனை முன்னிட்டு, இன்று முதல், அந்த வங்கியின் ஏடிஎம் மற்றும் கணக்குகளில் இருந்து, வாடிக்கையாளர்கள் 50,000 மட்டுமே எடுக்க இயலும் என, அறிவித்தது.
இதனையடுத்து, அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள பயனர்கள் கடும் விரக்தி அடைந்தனர். நிலைமை எல்லையைக் கடப்பதை உணர்ந்த இந்திய வங்கிகளை நிர்வகிக்கும், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, அந்த எஸ் பேங்க் வங்கியினை, தன்னுடையக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. அதனை நிர்வகிக்க, தற்பொழுது எஸ்பிஐ சார்பில் சிறப்புக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர்கள், தங்களுடையப் பணத்தினை உடனடியாகத் திரும்பத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதனை முன்னிட்டு, இன்று மதியம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், எஸ் பேங்க் பிரச்சனைக் குறித்து, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் உள்ளோம்.
வாடிக்கையாளர்களின் பணத்திற்கு, எதுவும் ஆகாது என, அவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில், வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் குறைப்பது குறித்து, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.