என்னை ஏன் குறை கூறுகின்றீர்கள்? நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

06 December 2019 அரசியல்
nsitharaman12.jpg

நான் ஒரு விஷயத்தை நினைவு கூற விரும்புகின்றேன். 2012ம் ஆண்டு இருந்தைக் காட்டிலும், தற்பொழுது வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டிற்குள்ளேயே உள்ளது என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில், முன்னாள் நிதியமைச்சர் பேசியதைப் பற்றிப் பேசிய நிர்மலா சீதாராமன், 2012ம் ஆண்டு காலக்கட்டத்தில் உணவுப் பொருட்களின் விலை, இமாலய உயரத்தை எட்டியது. என்னை குறைக் கூறும் மக்களுக்காக நான் இதனைக் கூறுகின்றேன். மத்திய அரசின் முயற்சியால், மாநில அரசுகளுக்குத் தேவையான வெங்காயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்னும் வழங்கப்படவும் உள்ளன.

2012ம் ஆண்டின் பொழுது, மினரல் வாட்டரை 15 ரூபாய்க்கும், ஐஸ்க்ரீமினை 20 ரூபாய்க்கும் வாங்க மக்களால் முடியும் பொழுது, ஏன் விலைவாசி உயர்வைப் பேசுகின்றனர் என முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் பேசியுள்ளார் என்பதை, நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டினார்.

இப்படி மக்கள் மீதுப் பழிப்போட்டவர்கள், தற்பொழுது என் மீதும் நம்முடைய அரசாங்கத்தின் மீதும் பழிப் போடுகின்றனர் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS