முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!

24 March 2020 அரசியல்
nirmalasitharaman1.jpg

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா வைரஸ் காரணமாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இன்று வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் பேசிய அவர், பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தினைக் கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளார். அவைகள் பின்வருமாறு.

பொருளாதார அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்பட மாட்டாது. ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான கால அவகாசமானது, ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. டிடிஎஸ் தாமதமாக வைப்பு வைக்கப்பட்டால், 9% மட்டுமே வட்டி வசூலிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜூன் 30ம் தேதி வரை மட்டுமே இதுவும் செல்லும்.

ஆதார் கார்டினை, பான் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசமானது, ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்வதற்கான கால அவகாசமானது, ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பிற்கான அவசரக் கால நிதியினை, மத்திய அரசு அறிவிக்கும். விவாத் சே விஸ்வாஸ் திட்டமானது, ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு, வங்கிக் கணக்கில் குறைந்த வைப்புத் தொகை வரம்பு கிடையாது. எந்த ஏடிஎம்களிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

HOT NEWS