இந்த ஓலா ஊபர் தான் ஆட்டோ மொபைல் உற்பத்தி குறைவுக்கு காரணம்! நம்ம நிதியமைச்சரின் அதிரடி பதில்!

11 September 2019 அரசியல்
nsitharaman.jpg

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று, சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, இந்தியாவின் பொருளாதார மந்தநிலை உட்பட, பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அவர் கூறுகையில், மெட்ரோ ரயில் மற்றும் வாடகைக் கார்களை மக்கள் பயன்படுத்திகின்றனர். இதனால், வாகன விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. இது சாதாரண விஷயம் தான். இந்தப் பொருளாதார மந்த நிலை, இதற்கு முன்னும் ஏற்பட்டு இருந்தது. இது வரும் காலங்களில் சீராகிவிடும்.

ஜிஎஸ்டி வரி உட்பட பல அம்சங்களைக் குறைத்துள்ளோம். புதிய வாகனங்கள் வாங்குவதற்கு வரிச் சலுகைகள் அறிவித்துள்ளோம். அரசாங்கமே 100 லட்சம் கோடி ரூபாயை, உள்கட்டமைப்பு வசதிகளுக்காக, நேரடியாக முதலீடு செய்ய உள்ளது.

வாகன உற்பத்தியாளர்கள் பலக் கோரிக்கைகளை வைத்துள்ளனர். அது பற்றி பரிசீலித்து வருகின்றோம். அது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, பல சலுகைகள் வழங்கியும் உள்ளோம். மேலும், பொருளாதாரத்தை நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றோம் எனவும் கூறினார்.

தங்க விலை உயர்வுக்கு காரணம் கூறிய நிர்மலா சீதாராமன், தங்கத்தை முழுமையாக நாம் இறக்குமதி செய்கின்றோம். இதன் காரணமாகவே, இதன் விலை உயர்கின்றது. மேலும், இதன் விலையை, கச்சா எண்ணெய், டாலர் மதிப்பு மற்றும் மார்க்கெட்டில் உள்ள டிமாண்ட் காரணமாகவே இதன் விலை உயர்கின்றது எனவும் கூறினார்.

ரஷ்யா மற்றும் சென்னை இடையே உருவாக்கப்பட உள்ள கடல்வழி திட்டத்தின் மூலம், கப்பல்துறை மற்றும் துறைமுக வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இது இப்பகுதி மக்களுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடிய ஒன்று.

HOT NEWS