வீடுகள் விற்பனைக்கு 25,000 கோடியை வழங்கும் மத்திய அரசு! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

08 November 2019 அரசியல்
nirmala.jpg

இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையினை சமாளிக்க, மத்திய அரசு கடும் முயற்சி எடுத்து வருகின்றது. முதலில் ஆட்டோ மொபைல் துறையில், கடும் வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து, அத்துறைக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகள் குறைக்கப்பட்டன. மேலும், அத்துறைக்கு பல வித சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், தற்பொழுது ரியல் எஸ்டேட் துறையினருக்கு சலுகைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இது குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், மும்பை உட்பட பல பகுதிகளில், கட்டுமானத் தொழில் தேக்கம் அடைந்துள்ளது. சுமார், 1600க்கும் மேற்பட்ட குடியிருப்புக் கட்டும் திட்டங்களும், 4,58,000 வீடுகள் மற்றும் தங்கும் இடங்களும் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளன. இந்தப் பிரச்சனையை சரி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, தேசிய நிதியில் இருந்து, சுமார், 10,000 கோடி ரூபாயும், எல்ஐசி நிறுவனம் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிடம் இருந்து 15,000 கோடி ரூபாய் என மொத்தம் 25,000 கோடி ரூபாயானது வழங்கப்பட உள்ளது. இவ்வாறு வழங்கப்படும் பணமானது, தேக்கமடைந்துள்ள ரியல் எஸ்டேட் துறையின் விற்பனை மற்றும் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதி கட்டியும் கட்டாமல் இருக்கும் குடியிருப்பு கட்டிடத்திற்கு, 400 கோடி ரூபாய் வரையிலும் நிதி வழங்கப்பட உள்ளது.

HOT NEWS