ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்போரேஷன் உள்ளிட்டவை, விரைவில் விற்கப்படும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு பிர்தேயகமாகப் பேட்டியளித்துள்ள சீதாராமன், வரும் மார்ச் மாதம் ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களையும் விற்க உள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம், நம்மால் ஒரு லட்சம் கோடி ரூபாயினை பெற இயலும் எனவும் கூறியுள்ளார்.
இந்த இரண்டு நிறுவனங்களையும் வாங்குவதற்கு, பல முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
timesofindia.indiatimes.com/business/india-business/air-india-bharat-petroleum-corporation-to-be-sold-by-march-fm/articleshow/72090771.cms