கல்விக் கடன் தள்ளுபடி கிடையாது! நிதியமைச்சர் அறிவிப்பு!

11 December 2019 அரசியல்
nirmalasitharamanloan.jpg

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் அசாத்தியமான பொருளாதார சூழ்நிலை, வேலைவாய்ப்பின்மைக் காரணமாக கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா, என நாடாளுமன்றத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

அவருடையக் கேள்விக்குப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்விக் கடன் தள்ளுபடி சம்பந்தமாக எவ்விதத் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 4.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 7.5 சதவிகிதமாக அதிகரித்தும் உள்ளது. கடந்த 2016-2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு மார்ச் மாத கணக்கின் படி, நிலுவையில் உள்ள கல்விக் கடனின் தொகையானது, 67,685 கோடியில் இருந்து 75,450 கோடியாக உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் இருந்து கடன் பெற்றுள்ளவர்கள், எந்த வேலை செய்கின்றனர் என வங்கிகளிடம் போதுமான தகவல்கள் இல்லை. இதனால், அவர்கள் என்ன செய்கின்றனர் எனத் தெரியவில்லை. பொதுத்துறை வங்கிகளின் தகவல் படி, கல்விக் கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எவ்வித வழக்கும் பதிவாகவில்லை.

வங்கிகள் தங்களுடைய வாராக் கடன்களை எவ்வாறு வசூல் செய்ய வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. தற்பொழுது நிலவும் சூழ்நிலையின் காரணமாக, கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை எனவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

HOT NEWS